×

ரயில் நிலையங்களில் குழந்தை பாதுகாப்பிற்கு சிறப்பு முன்னேற்பாடு: டிஜிபி சைலேந்திரபாபு பேட்டி

சென்னை: ரயில் நிலையங்களில் குழந்தைகளின் பாதுகாப்பிற்கு ரயில்வே துறை பல சிறப்பு முன்னேற்பாடுகளை மேற்கொள்ள உள்ளதாக ரயில்வே பாதுகாப்புத் துறை டிஜிபி சைலேந்திரபாபு கூறியுள்ளார். ரயில்வே பாதுகாப்புத்துறை மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு தொண்டு நிறுவனம் சார்பில் குழந்தை கடத்தல் மற்றும் குழந்தைகளுக்கான பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி சென்னை சென்ட்ரலில் உள்ள தெற்கு ரயில்வே மண்டல அலுவலகத்தில் நேற்று நடந்தது. நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி பி.எம்.நாயர் மற்றும் ரயில்வே பாதுகாப்புத் துறை டிஜிபி சைலேந்திரபாபு மற்றும் பல  அதிகாரிகள் கலந்து கொண்டனர். மேலும், நிகழ்ச்சியில் தமிழக ரயில்வே பாதுகாப்புத் துறையில் சிறப்பாக பணியாற்றிய காவலர்களுக்கு விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது.

இதையடுத்து, டிஜிபி சைலேந்திரபாபு நிருபர்களிடம் கூறியதாவது: கடந்த மூன்று ஆண்டுகளில் தமிழகத்தில் கடத்தப்பட்ட 7 ஆயிரத்து 500க்கும் மேற்பட்ட குழந்தைகள் ரயில்வே போலீசாரால் மீட்கப்பட்டுள்ளனர். இவ்வாறு கடத்தப்பட்ட  699 குழந்தைகள் 18 வயதிற்கும் கீழ் உள்ள பெண் குழந்தைகள். ரயில்வே நிலையங்களிலும் மற்றும் பல இடங்களில்  இருந்தும் மீட்கப்பட்ட குழந்தைகளில்  பெரும்பாலானவர்கள்   வெளிமாநிலங்களில் இருந்து வேலைக்காக அடிமைப்படுத்தி இங்கு அழைத்து வரப்பட்டவர்கள். இதேபோல், வீட்டில் சண்டை பே௱ட்டுக்கொண்டு வெளியேறியவர்களும் அடங்குவார்கள். மேலும், குழந்தைகள் பாதுகாப்புக்காக ரயில்வே பாதுகாப்புத்துறை சார்பில் ரயில் நிலையங்களில் பல சிறப்பு முன்னேற்பாடுகள் மேற்கொள்ளப்படும். இவ்வாறு கூறினார்.


Tags : Railway Stations ,DGP Sailendrababu ,
× RELATED நெல்லை, தென்காசி, தூத்துக்குடியில்...