×

பள்ளிக்கரணை, தாம்பரம் பகுதிகளில் ஐ.டி ஊழியர் உள்ளிட்ட இருவர் வீடுகளில் 70 சவரன் கொள்ளை: ஆசாமிகளுக்கு வலை

வேளச்சேரி: பள்ளிக்கரணை மற்றும் தாம்பரத்தில் ஐ.டி ஊழியர் உள்ளிட்ட இருவர் வீடுகளின் பூட்டை உடைத்து 70 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போலீசார் வழக்குப்பதிவு செய்து  கொள்ளையர்களை தேடி வருகின்றனர். பள்ளிக்கரணை பரசுராம் நகர் அடுக்குமாடி குடியிருப்பு முதல் தளத்தில் குடும்பத்துடன் வசிப்பவர் முனீர் உசைன் (40). தி.நகர் தனியார் நிறுவன விற்பனை பிரதிநிதி. கடந்த ஞாயிற்றுக்கிழமை   கடலூரில் உள்ள தனது தங்கையை அழைத்து  வருவதற்காக முனீர் உசைன் தனது குடும்பத்தோடு வீட்டை பூட்டிவிட்டு சென்றார். நேற்று வீட்டிற்கு வந்து பார்த்தபோது, வீட்டு கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். வீட்டிற்குள் சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 40 சவரன் நகைகள் கொள்ளை போனது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.   இதுகுறித்து முனீர் உசைன் பள்ளிக்கரணை காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் பரங்கிமலை துணை கமிஷனர் பிரபாகர், மடிப்பாக்கம் உதவி கமிஷனர் சவுரிநாதன் மற்றும் பள்ளிக்கரணை போலீசார் சம்பவ இடத்திற்கு     கைரேகை  நிபுணர்களுடன் விரைந்து சென்று வீட்டின் கதவு மற்றும் பீரோவில் பதிவான கொள்ளையர்களின் கைரேகையை எடுத்து சென்றனர்.

மேலும், போலீசார் வழக்குப்பதிவு செய்து தெருவில்   உள்ள கண்காணிப்பு கேமிராக்களை ஆய்வு செய்தபோது நேற்று முன்தினம் அதிகாலை 2 பேர் பைக்கில் வந்து கொள்ளையடித்து விட்டு ஹெல்மட் அணிந்துக் கொண்டு தப்பி செல்வது  பதிவாகி உள்ளது. இதை வைத்து   கொள்ளையர்கள் யார்? என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.மற்றொரு சம்பவம்: தாம்பரம் அடுத்த இரும்புலியூர்,  கே.கே.நகர் பகுதியை சேர்ந்தவர் மோகன்ராஜ் (35). தரமணியில் உள்ள ஐ.டி கம்பெனியில் வேலை செய்து வருகிறார். கடந்த 22ம்  தேதி காலை தனது பாட்டி இறந்து விட்டதால்  குடும்பத்துடன் மோகன்ராஜ்  ஜெயம்கொண்டம் சென்றிருந்தார். அங்கிருந்து நேற்று முன்தினம் இரவு வீட்டுக்கு வந்து கதவை  திறந்து உள்ளே சென்றனர். அப்போது, வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு  இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். படுக்கை அறைக்கு சென்று பார்த்தபோது, பீரோவில் வைத்திருந்த 30 சவரன் நகை  மற்றும் ரூ.50 ஆயிரம்  கொள்ளை போனது தெரியவந்தது.  இதுகுறித்து  பீர்க்கன்கரணை போலீசில் மோகன்ராஜ் புகார் செய்தார். போலீசர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.



Tags : shaving robberies ,houses ,IT staff ,areas ,Tambaram ,school ,
× RELATED நாகை மாவட்டம் கீழ்வேளூரில் அருகே தீ...