திருவெறும்பூர் அரசு ஐடிஐ.ல் வெல்டர் பயிற்சியில் சேர விண்ணப்பங்கள் வரவேற்பு

திருச்சி, செப்.24: திருச்சி திருவெறும்பூர் அரசு ஐடிஐ.ல் வெல்டர் தொழிற்பிரிவில் மாணவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. திருவெறும்பூரில் அரசு தொழிற்பயிற்சி நிலையம் இயங்கி வருகிறது. இத்தொழிற்பயிற்சி நிலையத்தில் என்சிவிடி அங்கீகாரம் பெற்ற வெல்டர் (டியூயல்) தொழிற்பிரிவில் சேர்க்கை நடைபெறுகிறது. இப்பயிற்சியில் சேர விருப்பமுள்ளோர் தங்களது அசல் சான்றிதழ்களுடன் அரசினர் தொழிற் பயிற்சி நிலையம், திருவெறும்பூருக்கு நேரில் வந்து பயிற்சியில் சேர்ந்து கொள்ளலாம் என திருச்சி அரசு தொழிற்பயிற்சி நிலைய துணை இயக்குநரும், முதல்வருமான வேல்முருகன் கேட்டுக்கெண்டுள்ளார்.

Related Stories:

>