×

ஏலச்சீட்டு நடத்தி மோசடி தாய், மகன் மீது நடவடிக்கை காவல்துறை துணை ஆணையரிடம் புகார்

திருச்சி, செப்.24: திருச்சியில் ஏலச்சீட்டு நடத்தி மோசடி செய்த தாய், மகன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல் துறை துணை ஆணையரிடம் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. திருச்சி பொருளாதார குற்றப்பிரிவு துணை ஆணையரிடம், முகமது அபுதாகிர் என்பவர் நேற்று அளித்த மனுவில், திருச்சி காமராஜ்நகர் அண்ணா தெருவை சேர்ந்த முகமது இஸ்மாயில் மகன் அப்பாஸ் என்பவர் ஏலச்சீட்டு நடத்தி வருகிறார். இதனை நம்பி ரூ.2 லட்சம் ஏலச்சீட்டில், இரண்டு சீட்டுகள் சேர்ந்து 17வது சீட்டு வரை கட்டியுள்ளேன். இதன்மூலம் எனக்கு வர வேண்டிய தொகை ரூ.18,3950ஐ கேட்டபோது காலம் தாழ்த்தி வருகிறார். எனது குடும்ப தேவைக்காக சீட்டில் சேர்ந்து தொகை முழுவதையும் கட்டியும் எனக்கு வரவேண்டிய ரூ.183950 தராமல் ஏமாற்றும் நோக்கத்துடன் செயல்பட்டு வருகிறார். மேலும் கடந்த 22ம்தேதி தகாத வார்த்தைகளால் திட்டி மீறி பணம் கேட்டு வந்தால் ெகாலை செய்து விடுவதாக மிரட்டுகிறார். ஏலசீட்டு நடத்தி அப்பாஸ் மற்றும் அவரின் தாய் மெகபூப் நிஷா இருவரும் என்னையும், என்னை போன்ற பல நபர்களிடம் பல லட்சம் மோசடி செய்து ஏமாற்றியுள்ளனர். இதனை கேட்டு செல்லும் நபர்களை அடியாட்களை வைத்து மிரட்டி வருவதால் இருவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென மனுவில் தொிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Deputy Commissioner of Police ,
× RELATED சென்னை அசோக் நகரில் தாய், மகன் உடல் அழுகிய நிலையில் மீட்பு