×

ஆணையர் தரக்குறைவாக பேசியதாக கூறி மணப்பாறை ஒன்றிய அலுவலகத்தை 100 நாள் வேலை தொழிலாளர்கள் முற்றுகை

மணப்பாறை, செப்.24: மணப்பாறை அருகே நூறு நாள் வேலை செய்த பெண்களை ஒன்றிய ஆணையர் தரக்குறைவாக பேசுவதாக கூறி ஒன்றிய அலுவலகத்தை நேற்று முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகேயுள்ள ஆவாரம்பட்டி சங்கன் குளத்தில் நூறு நாள் வேலை நடந்து வருகிறது. அப்போது மதிய உணவுக்காக வேலை செய்த பெண்கள் அமர்ந்திருந்த போது, மணப்பாறையிலிருந்து இப்பணிகளை பார்வையிட வந்த சுதாகர் என்பவர் அப்பெண்களிடமிருந்து வேலை உறுதி திட்ட அடையாள அட்டையை வாங்கிக் கொண்டு வந்து விட்டார். பின்னர், இது சம்பந்தமாக விபரம் அறிய அப்பெண்கள் மணப்பாறை ஊராட்சி ஒன்றிய ஆணையர் லதாவை சந்திந்து தங்களது வேலை அட்டையை வழங்குமாறு கேட்டுள்ளனர். அப்போது, அப்பெண்களை ஒன்றிய ஆணையர் லதா மிகவும் தரக்குறைவாக பேசியதாக கூறப்படுகிறது. இதனை கண்டித்து, நேற்று பெண் தொழிலாளர்கள் விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகர்கள் மதனகோபால் தலைமையில், மணப்பாறை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு கோஷமிட்டனர். தகவலறிந்த மணப்பாறை போக்குவரத்து இன்ஸ்பெக்டர் பாண்டிவேல், மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் வினோத் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தி, போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்தனர். இப்போராட்டத்தால், மணப்பாறை ஒன்றிய அலுவலக வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags : Manapparai ,
× RELATED மணப்பாறை அருகே கிராவல் மண்...