×

தி காவிரி கல்லூரியில் பொறியாளர் தினவிழா

சேலம், செப்.24:  மேச்சேரி திகாவிரி பொறியியல் கல்லூரியில், ஐஇஐ மாணவர் சங்கம் சார்பில் 52வது ஆண்டு பொறியாளர் தினவிழா கொண்டாடப்பட்டது,பேராசிரியர் பெஞ்சமின் லாசரஸ் வரவேற்று பேசினார். சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு மின்பகிர்மான கழக உதவி நிர்வாக பொறியாளர் சிவராமன் கலந்து கொண்டு பேசினார். முன்னதாக சிறப்பு விருந்தினர்களுக்கு தி காவிரி கல்வி நிறுவனங்களின் செயலாளர் பேராசிரியர் இளங்கோவன் பொன்னாடை அணிவித்து, நினைவு பரிசு வழங்கி கவுரவித்தார். முதல்வர் துரைசாமி வாழ்த்துரை வழங்கினார். முன்னதாக, பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. சிவில் துறை பொறியாளர் சந்தோஷ்குமார் நன்றி கூறினார். இந்நிகழ்ச்சியில், தி காவிரி கல்வி நிறுவனங்களின் கௌரவ தலைவர் நடேசன், தலைவர் அன்பழகன், துணைத்தலைவர் மதன்கார்த்திக், தாளாளர் ராமநாதன், ஒருங்கிணைப்பாளர் ரேவதி இளங்கோவன், செயல் இயக்குநர் கருப்பண்ணன் ஆகியோர் கலந்துகொண்டனர்.  நிகழ்ச்சி ஏற்பாடுகளை உதவி பேராசிரியர் துரைசிவம் செய்திருந்தார்.

Tags : Engineer's Day ,Cauvery College ,
× RELATED குமாரபாளையம் எக்ஸல் கல்லூரியில் பொறியாளர் தினவிழா