×

மாநில கூட்டுறவு வங்கி தலைவருக்கு நிர்வாகிகள் வாழ்த்து

வாழப்பாடி, செப்.24:மாநில கூட்டுறவு வங்கி தலைவராக, அம்மா பேரவை சேலம் மாவட்ட செயலாளர் இளங்கோவன், இரண்டாவது முறையாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். நேற்று முன்தினம்,  வாழப்பாடி அருகே  புத்திரகவுண்டன்பாளையத்திற்கு வந்த அவருக்கு, கட்சியினர் மற்றும் பொதுமக்கள்   வரவேற்பு அளித்தனர். இந்நிகழ்ச்சியில், தமிழ்நாடு விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தலைவரும், விவசாயிகள் கூட்டியக்கத்தின் மாநில துணை தலைவருமான சண்முகராமன், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் சக்திவேல், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கொட்டவாடி வெங்கடாஜலம், கல்லேரிப்பட்டி மாது, செம்மலை உள்பட பல நிர்வாகிகள்  பூங்கொத்து கொடுத்து, சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.

Tags : Executives ,State ,Co-operative Bank ,
× RELATED மத்திய கூட்டுறவு வங்கி ஊழியர் உள்பட 2 பேருக்கு கொரோனா