×

நாமக்கல் பேருந்து நிலையத்தில் சேலம் கோட்ட அரசு பஸ் ஜப்தி

நாமக்கல், செப்.24: விபத்தில் படுகாயமடைந்தவருக்கு இழப்பீடு வழங்காததால், நாமக்கல் பேருந்து நிலையத்தில் அரசு பஸ் ஜப்தி செய்யப்பட்டது.தர்மபுரி மாவட்டம் பென்னாகரத்தை அடுத்த சித்திரைபட்டியை சேர்ந்தவர் சம்பு (எ) காசி (50). இவர் நாமக்கல் மாவட்டம் ஜேடர்பாளையத்தில் தங்கி, கரும்பு ஆலையில் கூலித்தொழிலாளியாக வேலை செய்து வந்தார். கடந்த 2014 ஜூன்  13ம்தேதி, ஜேடர்பாளையம் அருகே நெட்டையம்பாளையம் பகுதியில் நடந்து சென்றபோது, இவர் மீது சேலம் கோட்ட அரசுபஸ்  மோதியது. இதில் படுகாயம் அடைந்த சம்பு, அரசு போக்குவரத்து கழகம் இழப்பீடு வழங்கக்கோரி, நாமக்கல் மாவட்ட தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், சேலம் கோட்ட அரசுபோக்குவரத்து கழகம், ரூ.13 லட்சத்து  நஷ்டஈடு வழங்க உத்தரவிட்டது. ஆனால், அரசு போக்குவரத்து கழகம் சார்பில் நஷ்டஈடு தொகை வழங்கவில்லை. இதையடுத்து சம்பு, அதே நீதிமன்றத்தில், நிறைவேற்று மனுவை தாக்கல் செய்தார். இதை விசாரித்த நீதிபதி லதா சேலம் கோட்டத்துக்கு சொந்தமான அரசு பஸ்சை ஜப்தி செய்ய உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து, நேற்று நாமக்கல் பேருந்து நிலையத்துக்கு வந்த சேலம் கோட்ட அரசு பஸ்சை நீதிமன்ற அமீனாக்கள் ஜப்தி செய்தனர்.ஜேகேகே நடராஜா பொறியியல் கல்லூரியில்புதிய தொழில்நுட்பங்களைகற்றுக்கொள்ள புரிந்துணர்வு ஒப்பந்தம்குமாரபாளையம், செப்.24: புதிய தொழில்நுட்பங்களை கற்றுக்கொள்ள வகை செய்யும் வகையில், குமாரபாளையம் ஜேகேகே நடராஜா பொறியியல் கல்லூரி புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

குமாரபாளையம் ஜேகேகே நடராஜா பொறியியல் கல்லூரியும் ஈரோடு லைவ்வயர் நிறுவனமும் இணைந்து புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்படுத்தியுள்ளன. இந்த ஒப்பந்தம் மூலம் வளர் தொழில் நுட்பங்களான மின் ஆட்டோ கேட், ஆர்க்கேட், பிளாக்செயின், பொருள்களின் இணையம், நெட்வொர்க்கிங், கிலவ்டு கம்யூட்டிங், தகவல் அறிவியல், ஸ்கேடா உள்ளிட்டவை புதிய தொழில்நுட்பங்களை மாணவ மாணவிகள், கல்லூரி வளாகத்திலேயே கற்றுக்கொள்ள முடியும். இந்த தொழில்நுட்ப அறிவை கொண்டு வேலைவாய்ப்புகளை எளிதில் பெறமுடியும். புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கல்லூரி முதல்வர் தமிழரசு, லைவ்வயர் நிறுவனத்தின் ஈரோடு கிளை தலைவர் பிரபாகரன் ஆகியோர் கையெழுத்திட்டனர். நிகழ்ச்சியில் வேலைவாய்ப்புத்துறை அலுவலர் ஜித்விக்னேஷ், துறைத்தலைவர்கள் செந்தில், கார்த்திக், மாணிக்கம், சத்யசீலன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags : Salem ,government bus junction ,bus stand ,Namakkal ,
× RELATED சேலம் மாவட்ட பாஜ தலைவர் மீது பெண்...