×

செவிலியரை கண்டித்து ஆரம்ப சுகாதார நிலையம் முற்றுகை

திருச்செங்கோடு, செப்.24: நோயாளிகளிடம் கறாராக நடந்து கொள்ளும் செவிலியரை கண்டித்து, அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.  எலச்சிபாளையத்திலிருந்து இலுப்புலி செல்லும் சாலையில் செயல்பட்டு வரும் அரசு ஆரம்ப துணை சுகாதார நிலையத்தில், 12 ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்த ஆரம்ப சுகாதார நிலையத்தில் தினசரி சுமார் 200 முதல் 300 பேர் வரை சிகிச்சை பெற்று செல்கின்றனர். செவிலியராக பணியாற்றும் வசந்தகுமாரி(54) என்பவர், நோயாளிகளிடம் கனிவுடன் நடந்து கொள்வதில்லை என குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில், அவர் மீது நடவடிக்கை எடுக்க கோரியும், இரவுநேர மருத்துவர் நியமித்து 24 மணி  நேரமும் ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட வேண்டியும், தரம் உயர்த்த வலியுறுத்தியும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியக்குழு உறுப்பினர் சுரேஷ் தலைமையில் பொதுமக்கள், முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர், ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் கருணாகரனிடம் கோரிக்கை மனு அளித்தனர். இதுகுறித்து உயரதிகாரிகளிடம் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுக்க பரிந்துரைப்பதாக அவர் தெரிவித்தார். இந்த போராட்டத்தில் ஒன்றிய செயலாளர் சுரேஷ், ஒன்றியக்குழு உறுப்பினர் ரமேஷ், கிளை செயலாளர்கள் சத்யா, கிட்டுசாமி மற்றும் பொதுமக்கள் உட்பட 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.


Tags : health center ,nurses ,
× RELATED ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் விழிப்புணர்வு