×

போச்சம்பள்ளி பகுதிகளில் மின்விபத்துகளை தடுக்க விழிப்புணர்வு அவசியம்

போச்சம்பள்ளி, செப்.24: போச்சம்பள்ளி மின்வாரிய செயற்பொறியாளர் வேல் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
சாலைகளில் மின்கம்பிகள் அறுந்து கிடந்தால், அதனருகில் பொதுமக்கள் செல்ல வேண்டாம். மின்கம்பிகள் பழுதடைந்திருந்தாலோ அல்லது கம்பங்கள் சாய்ந்த நிலையிலோ, மின்கம்பிகள் தாழ்வாக இருந்தாலோ உடனடியாக அருகில் உள்ள மின்வாரிய அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும். மின் தடையை சரிசெய்யும் பொருட்டு மின்கம்பத்திலோ, மின்மாற்றியிலோ ஏறி பணி செய்யக்கூடாது. மின்தடை ஏற்பட்டால், மின்வாரிய பணியாளர் மூலம் மட்டுமே மின்தடையை சரிசெய்யவேண்டும். பொதுமக்கள் தங்கள் சொந்த இடங்களில் பணிகள் மேற்கொள்ளும்போது, அருகில் மின்கம்பிகள் சென்றுகொண்டிருந்தால் அதனருகில் செல்லாமலும், அதனை தொடமாலும் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். திருவிழா காலங்களில், தேரோட்ட நிகழ்ச்சிக்கு முன் மின்வாரிய அலுவலகத்தில் உரிய அனுமதி பெறவேண்டும்.

கால்நடைகளை கம்பத்திலோ அல்லது இழுவை கம்பியிலோ கட்டக்கூடாது. மின்கம்பத்தின் மீது துணிகளை உலர்த்தக்கூடாது. மழைக்காலங்களில் மின்விபத்துகள் ஏற்படுவதை தடுக்க பிரிவு அலுவலர்களை தொடர்பு கொள்ளலாம். போச்சம்பள்ளி உதவி செயற்பொறியாளர் 9445855520, உதவி பொறியாளர் 944585521, அரசம்பட்டி உதவிபொறியாளர் 9445855522,  நாகரசம்பட்டி உதவிபொறியாளர் 94458555523, பண்ணந்தூர் உதவி பொறியாளர் 94459555248, மத்தூர் உதவி பொறியாளர்கள் 9445855516, 9445855517, 9445855518, ஜெகதேவி உதவி பொறியாளர் 9445955519, சந்தூர் உதவி பொறியாளர் 9445855524, பர்கூர் உதவிபொறியாளர்கள் 9445855511, 9445855512, 9445855513 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.அதேபோல், எலத்தகிரி உதவி பொறியாளர் 9445855514, வரட்டனப்பள்ளி உதவிபொறியாளர் 9445855515, பர்கூர் சிட்கோ உதவி பொறியாளர் 9445881251, ஊத்தங்கரை உதவி பொறியாளர்கள் 944585540, 9445855541, 9445855542, சாமல்பட்டி உதவி பொறியாளர் 9445855543, கல்லாவி உதவி பொறியாளர் 94458555544, காரப்பட்டு உதவி பொறியாளர் 9445878513, போச்சம்பள்ளி சிப்காட் உதவி பொறியாளர் 7598544287, பர்கூர் உதவிபொறியாளர் 04343 265554, ஊத்தங்கரை உதவிபொறியாளர் 04341 22035, போச்சம்பள்ளி செயற்பொறியாளர் 9445855510 ஆகியோரை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Tags : areas ,Pochampally ,
× RELATED கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் இருக்க முதல்வர் எடப்பாடி விழிப்புணர்வு ஆடியோ