×

கோட்டை பரவாசுதேவ பெருமாள் ஊஞ்சல் உற்சவத்தில் அருள்பாலிப்பு

தர்மபுரி, செப்.24: தர்மபுரி கோட்டை பரவாசுதேவ பெருமாள் புரட்டாசி சனிக்கிழமையை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். புரட்டாசி சனிக்கிழமையை முன்னிட்டு தர்மபுரி கோட்டை பரவாசுதேவர் கோயில் காலை 6 மணிக்கு மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. இதைதொடர்ந்து மூலவர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மாலை 6 மணிக்கு ஊஞ்சல் உற்சவம் நடந்தது. இதில் உற்சவர் பரவாசுதேவ பெருமாள் ஸ்ரீதேவி பூதேவி சமேதருடன் எழுந்தருளினார். இதில் ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

Tags : Arulpalipu ,Fort Paravasudeva Perumal Swing Festival ,
× RELATED தர்மபுரியில் தொடங்கப்பட்டு கிடப்பில் போடப்பட்ட ஜவுளி பூங்கா திட்டம்