×

மாவட்ட காங்கிரஸ் செயற்குழு கூட்டம்

தர்மபுரி செப்.24: தர்மபுரி மாவட்ட காங்கிரஸ் செயற்குழு கூட்டம் தலைவர் கோவி.சிற்றரசு தலைமையில் நடந்தது. முன்னாள் மாவட்ட தலைவர்கள் இளங்கோ, பாலகிருஷ்ணன் ன்னிலை வகித்தனர். நகர தலைவர் செந்தில்குமார் வரவேற்றார். முன்னாள் எம்பி தீர்த்தராமன் பேசினார். கூட்டத்தில், வரும் 2ம் தேதி காந்தி பிறந்தநாளையொட்டி, தர்மபுரியில் உள்ள அவரது சிலை முன்பிருந்து அரசு மருத்துவக்கல்லூரி வரையிலும் உலக அமைதிக்கான பாதயாத்திரை செல்வது என முடிவு செய்யப்பட்டது. மேலும், 3ம் தேதி முதல் 9ம் தேதி வரை வட்டார அளவிலான காந்தியடிகளின் வாழ்க்கை வரலாறு குறித்து புகைப்பட கண்காட்சி நடத்துவது. வரும் 10ம் தேதி மத்திய அரசின் தவறான பொருளாதார கொள்கையை கண்டித்து கருத்தரங்கு நடத்துவது. பொருளாதார சீரழிவை கண்டித்து வரும் 20ம் தேதி தர்மபுரி பிஎஸ்என்எல் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடத்துவது என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இக்கூட்டத்தில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் சித்தையன், வட்டார தலைவர்கள் சுபாஷ், வஜ்ரம், பூபதிராஜா, வேலன், பிரகாசம், விசுவநாதன், சரவணன், ராஜபிரகாஷ், ஜனகராஜ், சண்முகம், முனுசாமி, காமராஜ், மாதப்பன், வடிவேல், முத்து, வெங்கடாசலம், நவீன், சண்முகம், கக்கன்ஜி, வேடியப்பன், பச்சியப்பன், ஓபிசி பிரிவு மாவட்ட தலைவர் நவீன் மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags : District ,Executive Meeting ,Congress ,
× RELATED ஈரோடு மாவட்டம் ஆணைக்கல்பாளையம்...