×

முன்னாள் படைவீரர் நலச்சங்க புதிய கட்டிட திறப்பு விழா

தர்மபுரி, செப்.24: தர்மபுரி மாவட்டம் நார்த்தம்பட்டியில், தேசிய முன்னாள் படைவீரர் நலச்சங்கத்தின் புதிய கட்டிட திறப்பு விழா நடந்தது.தேசிய முன்னாள் படைவீரர் நலச்சங்கத்தின் புதிய கட்டிட திறப்பு விழா, நல்லம்பள்ளி அடுத்த நார்த்தம்பட்டியில் நடந்தது. விழாவில் மாவட்ட வருவாய் அலுவலர் ரகமத்துல்லா கான் கலந்து கொண்டு புதிய கட்டிடத்தை திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சிறப்பு விருந்தினர்களுக்கு நினைவு பரிசுகள் வழங்கப்பட்டது. தர்மபுரி மாவட்ட முன்னாள் படைவீரர்கள் நல அலுவலக உதவி இயக்குனர் ராமகிருஷ்ணன், அதியமான்கோட்டை இன்ஸ்பெக்டர் ராஜேஷ் மற்றும் தேசிய முன்னாள் படைவீரர் நலச்சங்க தலைவர் சுப்ரமணியம், செயலாளர் மல்லிகார்ஜூனன், பொருளாளர் ராஜாஜி, சின்னசாமி, சிவசங்கரன், அய்யாசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Veterans Welfare New Building Opening Ceremony ,
× RELATED தர்மபுரியில் தொடங்கப்பட்டு கிடப்பில் போடப்பட்ட ஜவுளி பூங்கா திட்டம்