×

அறிவுத்திறன் மேம்படுத்த மாணவர்கள் அவசியம் செய்தித்தாள் படிக்கவேண்டும் தொண்டியக்காடு அரசு பள்ளி கருத்தரங்கில் அறிவுறுத்தல்

முத்துப்பேட்டை, செப்.24: முத்துப்பேட்டை அடுத்த தொண்டியக்காடு அரசு உயர்நிலைப் பள்ளியில் மாணவர்களின் அறிவுத்திறன் மேம்படுத்தும் வகையல் தினந்தோறும் செய்திதாள்கள் வேண்டும் என வலியுறுத்தி விழிப்புணர்வு கருத்தரங்கில் வலியுறுத்தப்பட்டது.
முத்துப்பேட்டை அடுத்த தொண்டியக்காடு அரசு உயர்நிலைப் பள்ளியில் விழிப்புணர்வு கருத்தரங்கம் பள்ளியின் தலைமை ஆசிரியை தமிழ்ச்செல்வி தலைமையில் நடைபெற்றது. பெற்றோர்ஆசிரியர் கழகத் தலைவர் உத்திராபதி முன்னிலை வகித்தார். இதில் மாணவர்களுக்கு செய்தித்தாளின் அவசியமும் செய்தித்தாளில் பயனையும் விளக்கி பலரும் பேசினர்.மாணவர்கள் ஒவ்வொருவரும் தினந்தோறும் பொதுஅறிவையும் வளர்க்கும் வகையில் செய்தி படிக்கவேண்டும் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. அதனை தொடர்ந்து பள்ளியில் மாணவர்கள் ஒன்றாக அமர்ந்து செய்தி தாள் படித்தனர். அதேபோல் மாணவர்கள் ஒவ்வொன்றாக எழுந்து முக்கிய செய்திகளை படித்தனர். இந்த நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட வட்டார வளமைய மேற்பார்வையாளர் முத்தண்ணா பேசுகையில்:இரண்டு மாதங்களுக்கு முன்பு திருவாரூர் மாவட்டத்திற்கு வருகை தந்த மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இணை இயக்குனர் மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்தும் பொருட்டு பாடப்புத்தகங்கள் மட்டுமல்லாமல் பொது அறிவை வளர்க்க கூடிய நாளிதழ்கள் நூலக புத்தகங்கள் ஆகியவற்றை படித்து மாணவர்கள் தங்களின் தனித்திறமையை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.இதன் தொடர்ச்சியாக தினகரன் நாளிதழ், செய்தித்தாள் படிக்கும் பழக்கத்தினை மேம்படுத்த அறிவித்த அறிவொளி திட்டம் மூலம் ஒராண்டு சந்தா திட்டத்தின்கீழ் தொண்டியக்காடு அரசு உயர்நிலைப் பள்ளியின் முன்னாள் மாணவர் நிஷாந்தன் என்பவர் அப்பள்ளிக்கு தினகரன் நாளிதழ் ஓராண்டிற்கு வழங்கும் வகையில் சந்தா செலுத்தி அதன்படி அப்பள்ளி மாணவர் கள் தினசரி செய்தித்தாள் படிக்கும் பழக்கம் உருவாக்கப்பட்டது. அந்த முன்னாள் மாணவர் நிஷாந்தனை பாராட்டுகிறோம் என்றார்.

Tags : newspaper ,
× RELATED பத்திரிகை துறையின் கோரிக்கைகளை...