×

மருத்துவ துணை செவிலியர் பணியிடத்திற்கு பதிவு செய்த நபர்கள் விவரம் சரிபார்க்க அழைப்பு

திருவாரூர், செப். 24: திருவாரூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் மருத்துவ துணை செவிலியர் மற்றும் பல்நோக்கு சுகாதார ஊழியர் பணியிடத்திற்கு பதிவு செய்துள்ளவர்கள் வரும் 26ம்தேதிக்குள் தங்களது பதிவு விவரங்களை சரிபார்த்து கொள்ளுமாறு கலெக்டர் ஆனந்த் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து கலெக்டர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,மருத்துவ பணியாளர் தேர்வு வாரியத்தால் அறிவிக்கப்பட்டுள்ள கிராம சுகாதார செவிலியர்கள் காலி பணியிடத்திற்கு வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ள வர்கள் மாநில உத்தேச பதிவு மூப்பின் படி பரிந்துரைக்கப்பட உள்ளனர். இந்த பணியிடத்திற்கு 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் அரசு அங்கீகாரம் பெற்ற மருத்துவ நிறுவனத்தில் 18 மாத மருத்துவ துணை செவிலியர் பயிற்சி அல்லது பல்நோக்கு மருத்துவ ஊழியர் சான்று அல்லது 12ம் வகுப்பு தேர்ச்சியுடன் 2 வருட துணை செவிலியர் பயிற்சி அல்லது பல்நோக்கு மருத்துவ ஊழியர் சான்று பெற்றிருப்பதுடன் தமிழ்நாடு நர்சிங் கவுன்சிலிங்கில் பதிவு செய்திருத்தல் வேண்டும்.

இதற்கான வயது வரம்பாக கடந்த ஜூலை மாதம் 1ம் தேதி படி தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி வகுப்பினர் மற்றும் அருந்ததியர் வகுப்பினர் மிகவும் பின்தங்கிய வகுப்பினர் பின்தங்கிய வகுப்பினர் முஸ்லிம் பின்தங்கிய வகுப்பினர் ஆகியோருக்கு உச்சபட்ச வயது வரம்பு இல்லை.முற்பட்ட வகுப்பினர் 40 வயதிற்கு மிகாமல் இருத்தல் வேண்டும் .எனவே மேற்காணும் காலி பணியிடத்திற்கு கல்வித் தகுதியும் வயதுவரம்பும் உள்ள விண்ணப்பதாரர்கள் தங்களது அசல் கல்வி சான்று சாதி சான்று மற்றும் நர்சிங் கவுன்சிலில் பதிவு செய்த சான்று மற்றும் முன்னுரிமை பதிவு தொடர்பான சான்று ஆகியவற்றுடன் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தினை வரும் 26ம் தேதிக்குள் நேரில் அணுகி தங்களது பெயர் மற்றும் பதிவு விவரங்களை சரிபார்த்து கொள்ளலாம். இவ்வாறு கலெக்டர் ஆனந்த் தெரிவித்துள்ளார்.


Tags : Individuals ,Medical Assistant Nurse Workplace ,
× RELATED அரசு புறம்போக்கு நிலத்தை...