மணமேல்குடியில் அண்ணா பிறந்தநாள் பொதுக்கூட்டம்

மணமேல்குடி, செப்.24: அறந்தாங்கி தொகுதி அதிமுக சார்பில் அண்ணாவின் 111வது பிறந்தநாள் விழா பொதுக் கூட்டம் நடந்தது.மணமேல்குடி ஒன்றிய அதிமுக செயலாளர் துரைமாணிக்கம் தலைமை வகித்தார். அறந்தாங்கி தெற்கு ஒன்றிய செயலாளர் பெரியசாமி முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் அமைச்சர் விஜயபாஸ்கர், மாவட்ட செயலாளர் வைரமுத்து, முன்னாள் எம்எல்ஏ ராஜநாயகம், தலைமை கழக பேச்சாளர் நாகையன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். நிகழ்ச்சியில் பல்வேறு கட்சியிலிருந்து விலகிய 300க்கும் மேற்பட்டோர் விஜயபாஸ்கர் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர். முன்னதாக ஆவுடையார்கோவில் ஒன்றிய செயலாளர் கூத்தையா வரவேற்றார். மணமேல்குடி ஊராட்சி செயலாளர் சந்திரன் நன்றி கூறினார்.

Related Stories:

>