×

கண்டியாநத்தம் கிராமம் கூட்டுறவு கடன் சங்கத்தில் கறவை மாட்டுக்கு கடனுதவி

பொன்னமராவதி, செப்.24: பொன்னமராவதி அருகே கண்டியாநத்தம் கிராமத்தில் கூட்டுறவு கடன் சங்கம் சார்பில் கறவை மாட்டு கடன் வழங்கும் விழா நடைபெற்றது. ஆலவயல் மற்றும் கண்டியாநத்தம் ஆகிய ஊர்களில் ஆலவயல் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் சார்பில் விவசாய கூட்டு பொறுப்பு குழுக்களை சேர்ந்த 34 நபர்களுக்கு கறவைமாட்டு கடனாக ரூ.10 லட்சம் மதிப்பில் கடன் தொகை வழங்கப்பட்டது. இதில் தொடக்க வேளாண்மை கூட்டுறவுகடன் சங்க தலைவர் பழனிச்சாமி செயலாளர் பழனிச்சாமி, இயக்குனர் அழகு, சரக மேற்பார்வையாளர் சிதம்பரம் ஆகியோர் கடன் வழங்கினர்.


Tags :
× RELATED புதுக்கோட்டை அஞ்சல் கோட்டத்தில்...