×

அறந்தாங்கியில் தலைமை ஆசிரியர்களுக்கு தற்காப்பு கலை பயிற்சி

அறந்தாங்கி, செப்.24: அறந்தாங்கி வட்டார வள மையத்தில் நடுநிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு தற்காப்பு கலை பயிற்சிக்கான கூட்டம் நடைபெற்றது.கூட்டத்தினை அறந்தாங்கி வட்டார கல்வி அலுவலர் முத்துக்குமார் தலைமையேற்று நடத்தினார். வட்டார வளமைய மேற்பார்வையாளர் பொறுப்பு ஆசிரியர் பயிற்றுநர் சிவயோகம் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் 42 அரசு நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.இக்கூட்டத்தில் பயோமெட்ரிக் பயிற்சியும் நடைபெற்றது.தற்காப்பு பயிற்சியானது 6, 7 மற்றும் 8ம் வகுப்பில் படிக்கும் அனைத்து பெண் குழந்தைகளுக்கும் கொடுக்கப்பட உள்ளது. தற்காப்பு பயிற்சியில் பெண் குழந்தைகளுக்கான தன்னம்பிக்கை, உடல் வலிமை, எதையும் எதிர் கொள்ளும் பண்பு மற்றும் மன வலிமை ஆகிய திறன்களை கற்றுக்கொள்ள முடியும்.பெண் குழந்தைகளுக்கு எதிர்பாராத இடங்களில் பிரச்னைகள் ஏற்படும் போது அதனை எதிர்த்து தன்னை தற்காத்து கொள்வது இப்பயிற்சியின் மூலம் அனைத்து பெண் குழந்தைகளும் பெறுகின்றனர்.அனைத்து அரசு நடுநிலைப் பள்ளிகளிலும் இப்பயிற்சியானது அக்டோபர், நவம்பர் மற்றும் டிசம்பர் ஆகிய மூன்று மாதங்களில் நடைபெற உள்ளது.


Tags : Headmasters ,
× RELATED ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த 3 அரசு பள்ளி...