×

தூத்துக்குடி மாவட்டத்தில் சிறப்பு குழந்தைகளுக்கான புத்துணர்வு சுற்றுலா பயணம்

தூத்துக்குடி, செப். 24: தூத்துக்குடியில் மாற்றுத்திறன் சிறார்களுக்கான புத்துணர்வு சுற்றுலா பயணத்தை கலெக்டர் சந்தீப்நந்தூரி கொடியசைத்து துவக்கி வைத்தார். தூத்துக்குடி   கலெக்டர் அலுவலக வளாகத்தில், மாவட்ட சுற்றுலா வளர்ச்சிக் கழகம் மற்றும்   மாற்றுத்திறனாளிகள் நலத்துறை இணைந்து மாற்றுத்திறன் சிறார்களுக்கான ஒரு   நாள் புத்துணர்வு சுற்றுலா பயணம் துவக்க நிகழ்ச்சி நடந்தது.   இந்நிகழ்ச்சியில் கலெக்டர் சந்தீப்நந்தூரி, கலந்து கொண்டு, ஒரு நாள்   புத்துணர்வு சுற்றுலா பயணத்தை கொடியசைத்து துவக்கி வைத்து, குழந்தைகளுக்கு   இனிப்புகளை வழங்கினார்.

புத்துணர்வு சுற்றுலா பயணம், கலெக்டர்   அலுவலகத்தில் இருந்து துவங்கி, நெல்லை அறிவியல் மையத்தினை  பார்வையிட்டு  மீண்டும் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து நிறைவு பெறுகிறது.  இந்த பயணத்தில்  ஆரம்ப பயிற்சி மையத்தில் பயிலும் காதுகேளாத மற்றும் வாய்  பேச இயலாத குழந்தைகள், மனவளர்ச்சி குன்றிய குழந்தைகள் (1 முதல் 6   வயதிற்குட்பட்டவர்கள்) என 30 மாணவ, மாணவிகள்  அவர்களது பெற்றோர்களுடன் பங்கேற்றனர். இந்நிகழ்ச்சியில், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சிவசங்கரன், சுற்றுலா அலுவலர் சீனிவாசன், உதவி சுற்றுலா அலுவலர்   கோவிந்தராஜ்  பங்கேற்றனர்.

Tags : Special Children's Refreshment Tour ,Thoothukudi District ,
× RELATED தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே...