×

கோவில்பட்டியில் ஆலோசனை கூட்டம் மானிய விலையில் விவசாய இடுபொருட்கள்

கோவில்பட்டி, செப். 24:  மானிய விலையில் விவசாய இடுபொருட்கள் வழங்க வேண்டும் என தமிழ் விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. கோவில்பட்டியில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் இதற்கான தீர்மானம்  நிறைவேற்றப்பட்டது. கூட்டத்திற்கு மாநில தலைவர் நாராயணசாமி தலைமை வகித்தார். வடக்கு, மேற்கு மாவட்டத் தலைவர்கள் நடராஜன்,  வெள்ளத்துரை முன்னிலை வகித்தனர். மாவட்ட துணைச் செயலாளர்  மார்ட்டீன், துணைத் தலைவர் சாமியா, அவைத்தலைவர் வெங்கடசாமி,  விளாத்திகுளம் தாலுகா தலைவர் கோபாலகிருஷ்ணன், வேலுச்சாமி, விருதுநகர்  மாவட்டத் தலைவர் செல்வராஜ், மாவட்ட துணைத்தலைவர் பாஸ்கரன், சுப்புராம்,  சுப்புராஜ் மற்றும் விவசாயிகள் திரளாகப் பங்கேற்றனர்.

கூட்டத்தில்  மக்காச்சோள பயிருக்கு காலதாமதமின்றி பயிர் காப்பீடு வழங்க வேண்டும். கயத்தாறு,  ஓட்டப்பிடாரம் ஆகிய பகுதிகளில் அதிக அளவில் காற்றாலைகள் நிறுவுவதை மாநில அரசு தடுத்துநிறுத்த வேண்டும்.   விவசாய இடுபொருட்களான உரம், பூச்சி கொல்லி மருந்துகளை மத்திய மாநில அரசுகள்  மானிய விலையில் விவசாயிகளுக்கு வழங்க வேண்டும். இதற்கான அடையாள அட்டைகளை அனைத்து விவசாயிகளுக்கும் தாமதமின்றி வழங்க வேண்டும். மதுரையை தலைமையிடமாகக்  கொண்டு புதிய மாநிலம் உருவாக்க வேண்டும். கோவில்பட்டியை தலைமையிடமாகக் கொண்டு புதிய  மாவட்டம் உருவாக்க வேண்டும். இடைத்தேர்தல் நடைபெறும் நாங்குநேரி சட்டப்பேரவைத் தொகுதியில் தமிழ் விவசாயிகள் சங்கம் சார்பில் போட்டியிடுவது என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Tags : meeting ,Kovilpatti ,
× RELATED வாக்காளர்களுக்கு பணம் தருவதை...