×

விளாத்திகுளம் அருகே இருதரப்பினர் மோதல்

விளாத்திகுளம், செப். 24:  விளாத்திகுளம்  காடல்குடி அடுத்த வி.சுப்பையாபுரத்தை சேர்ந்த துரைராஜ் மகன் ராமச்சந்திரன் (40). இவரது சகோதரர்கள் சுப்புராஜ் (50) அழகுராஜ் (36). அதே ஊரைச் சேர்ந்த ராமசாமி மகன் முத்து (45) இவரது சகோதரர்கள் கிருஷ்ணமூர்த்தி (40) ஜெனகரபாண்டி (60) தெய்வேந்திரன் (36).  ரவிச்சந்திரனுக்கும், முத்துவுக்கும் நீரோடை தொடர்பாக மோதல் ஏற்பட்டது. இதில் இரு தரப்பினரும் தாக்கிக் கொண்டனர். இதில் காயமடைந்த ராமச்சந்திரன், ஜெனகரபாண்டி,சுப்புராஜ் ஆகிய 3 ேபரும் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இருதரப்பைச் சேர்ந்த 8 பேர் மீது வழக்குப் பதிந்த விளாத்திகுளம் இன்ஸ்பெக்டர் நாகலட்சுமி, முத்து,கிருஷ்ணமூர்த்தி, அழகுராஜ், தெய்வேந்திரன் ஆகிய 4 பேரை கைதுசெய்தார்.

Tags : clash ,Valathikulam ,
× RELATED நுங்கம்பாக்கம் செயல் வீரர்கள்...