×

கரூர் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் கிராம செவிலியர் பணியிடங்களுக்கு நாளை சான்றிதழ் சரி பார்ப்பு பணி

கரூர், செப். 24: கிராம செவிலியர் பணியிடங்களுக்கு நாளை சான்றிதழ் சரிபார்ப்பு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெறுகிறது.
மருத்துவப்பணியாளர் தேர்வு வாரிய உறுப்பினர் செயலர் மூலம் கிராம சுகாதார செவிலியர் 1234 பணிக்காலியிடங்களுக்கு பதிவு மூப்பு பட்டியல் கோரப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு மற்றும் இந்தியன் நர்சிங் கவுன்சில் அங்கீகாரம் பெற்ற நிறுவனத்தில் கிராம சுகாதார செவிலியர் மற்றும் பல்நோக்கு சுகாதார பணியாளர் படித்து தமிழ்நாடு நர்சஸ் அன்ட் மிட்விவஸ் கவுன்சிலில் பதிவு செய்த பதிவுதாரர்கள் மாநில பதிவு மூப்பின்படி பரிந்துரைக்கப்பட உள்ளனர்.
வயது வரம்பு எஸ்சிஏ, எஸ்சி, எஸ்டி, எம்பிசி, பிசி, பிசிஎம், 18 முதல் 57 வயது. இதர வகுப்பினர் (ஓசி) 18 முதல் 40 வயது. இதர வகுப்பினர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் 18 முதல் 50 வயது.
மேற்கண்ட தகுதியுடைய பதிவுதாரர்கள் தங்களது அனைத்து கல்விச்சான்றுகள்,வேலைவாய்ப்பு அடையாளஅட்டை, சாதிசான்று, குடும்ப அடையாள அட்டை, முன்னுரிமை சான்று ஆகியவற்றுடன் 25ம் தேதிக்கு (நாளை) முன்னதாக வெண்ணைமலை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மாவட்ட அலுவலரை நேரில் அணுகி, தங்களது பதிவுகளை சரிபார்த்துக்கொள்ளுமாறு கலெக்டர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.

Tags : nurses ,village ,Karur Employment Office ,
× RELATED கும்மிடிப்பூண்டி அருகே பரபரப்பு...