×

மைல் கல்லில் பைக் மோதி வாலிபர் பலி, நண்பர் காயம்

அரவக்குறிச்சி, செப். 24: அரவக்குறிச்சி அருகே இந்திரா நகரை சேர்ந்தவர் வீரக்குமார்(19). இவரது நண்பர் பால்வார்பட்டியைச் சேர்ந்த விக்ரம்(18). வீரக்குமார் பைக் ஓட்ட விக்ரம் பின்னால் அமர்ந்து சென்றார்.அரவக்குறிச்சி அருகே இந்திரா நகர் திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் சென்ற போது, பைக் சாலையோர மைல் கல்லில் மோதியதில் இருவரும் படுகாயமடைந்தனர். வீரக்குமார் சிகிச்சை பலனின்றி கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் இறந்தார். விக்ரம் கரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.இது குறித்து அரவக்குறிச்சி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

Tags :
× RELATED கோவையில் திருடுபோன பைக் பார்சலில்...