×

செங்கோட்டையில் இலவச கண் சிகிச்சை முகாம்

செங்கோட்டை, செப். 24: செங்கோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் குற்றாலம் விக்டரி லயன்ஸ் சங்கம் மற்றும் அரவிந்த் கண் மருத்துவமனை, நெல்லை பார்வையிழப்பு தடுப்பு சங்கம் ஆகியவை இணைந்து இலவச கண் சிகிச்சை முகாம் மற்றும் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு கண்டறியும் முகாமை நடத்தின. முகாமிற்கு பட்டய தலைவர் டாக்டர் மூர்த்தி தலைமை வகித்தார். சங்க தலைவர் கணேசமூர்த்தி, பட்டய உறுப்பினர் ஆறுமுகச்சாமி முன்னிலை வகித்தனர். முகாமை சங்க முகாம் ஒருங்கிணைப்பாளர் ஆடிட்டர் நாராயணன் துவக்கி வைத்தார். அரவிந்த் கண் மருத்துவமனை டாக்டர் அபிநவ் தலைமையிலான மருத்துவ குழுவினர் 166 புற நோயாளிகளுக்கு கண்புரை, கண்நீர் அழுத்த நோய், பார்வை குறைபாடு கருவிழியில் புண் முதலான நோய்கள் குறித்து பரிசோதனை செய்தனர். கண்புரை கண்டறியப்பட்ட 30 நோயாளிகள் அறுவை சிகிச்சைக்காக அரவிந்த் கண் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.

முகாமில் மாவட்ட தலைவர் டாக்டர் மூர்த்தி மேற்பார்வையில் அனைவருக்கும் ரத்தத்தில் சர்க்கரை அளவு இலவசமாக பரிசோதனை செய்யப்பட்டது. செயலாளர் சண்முகசுந்தரம், பொருளாளர் ரணதேவ், மாரியப்பன், ஜெய்லானி உட்பட பலர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை இலஞ்சி குமரன் டயர்ஸ் உரிமையாளர் இலத்தூர் ஆறுமுகச்சாமி, மேலாளர் ராஜேந்திரன், தங்கமணி, அரவிந்த் கண் மருத்துவமனை மாதவன் ஆகியோர் செய்திருந்தனர்.

Tags : Free Eye Treatment Camp ,Red Fort ,
× RELATED செங்கோட்டை அருகே ஆரியங்காவில் ஓநாய் தொல்லை அதிகரிப்பு