×

கரூரில் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க கலெக்டர் உத்தரவு

கரூர், செப். 24: பொதுமக்களின் மனுக்களின் மீது விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கலெக்டர் கூறினார்.கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள்குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.கலெக்டர் அன்பழகன் தலைமை வகித்தார். இக்கூட்டத்தில் பல்வேறு உதவித்தொகைகள், பட்டா, வேலைவாய்ப்பு, காவல்துறை நடவடிக்கை, புதிய ரேஷன்கார்டு, கல்வி, தொழில்கடன், குடிநீர், சாலை, அடிப்படை வசதிகள் மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து 404 மனுக்கள் பொதுமக்களால் அளிக்கப்பட்டன. மனுக்களை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி நடவடிக்கை எடுக்க கலெக்டர் உத்தரவிட்டார், மேலும் பல்வேறு முகாம்களில் பொதுமக்கள் அளித்த மனுக்களின்மீது உரியவிசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கலெக்டர் தெரிவித்தார்.இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேந்திரன், ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது)செல்வசுரபி, ஆதி திராவிட நல அலுவலர் லீலாவதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


Tags : Collector ,petitions ,Karur ,
× RELATED ராணிப்பேட்டை மாவட்டத்தில் கொரோனா...