×

சாரண, சாரணியருக்கு ஒருநாள் பயிற்சி முகாம்

கடையநல்லூர், செப். 24: கடையநல்லூர் சாதனா வித்யாலயா பள்ளி சாரண, சாரணிய இயக்க மாணவர்களுக்கான ஒருநாள் பயிற்சி முகாம், கருப்பாநதி அணைக்கட்டு பகுதியில் நடந்தது. முகாமிற்கு பள்ளி முதல்வர் மயில்கண்ணு ரமேஷ் தலைமை வகித்தார். சாரண இயக்க ஆசிரியர் பால்ராஜ் முன்னிலை வகித்தனர். தமிழ்நாடு சாரணர் இயக்க பயிற்சியாளர் சகாயமேரி சிறப்பு விருந்தினராக பங்கேற்று மாணவ, மாணவிளுக்கு முதலுதவி, இயற்கை பாதுகாப்பு, நீர்வளம் சேமிப்பு, உதவி மனப்பான்மை உருவாக்குவது, மரம் வளர்ப்பு போன்ற தலைப்புகளில் பயிற்சியளித்தார். சாதனா பள்ளி தாளாளர் ரமேஷ் நன்றி கூறினார். ஏற்பாடுகளை இளம் செஞ்சிலுவை சங்க கவுன்சிலர் வினோத்குமார் செய்திருந்தார்.

Tags : Scout ,training camp ,
× RELATED பெரம்பலூரில் மானாவாரி ஒருங்கிணைந்த பண்ணைய பயிற்சி முகாம்