×

வர்த்தக அணி துணை தலைவராக நியமனம் அய்யாத்துரை பாண்டியன் மு.க.ஸ்டாலினிடம் வாழ்த்து

சங்கரன்கோவில், செப். 24:  திமுக மாநில வர்த்தக அணி துணை தலைவராக நியமிக்கப்பட்ட அய்யாத்துரை பாண்டியன், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினிடம் வாழ்த்து பெற்றார். சங்கரன்கோவிலை சேர்ந்த தொழிலதிபர் அய்யாத்துரை பாண்டியன், திமுக தலைமை கழக அறிவிப்பின்படி வர்த்தக அணி மாநில துணை தலைவராக நியமிக்கப்பட்டார். மாநில பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட அய்யாத்துரை பாண்டியன், சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

நெல்லை கிழக்கு மாவட்ட செயலாளர் ஆவுடையப்பன், மேற்கு மாவட்ட செயலாளர் சிவபத்மநாதன், மாநகர் மாவட்ட செயலாளர் அப்துல்வகாப் ஆகியோர் உடனிருந்தனர். தொடர்ந்து திமுக பொருளாளர் துரைமுருகன், அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி மற்றும் முக்கிய நிர்வாகிகளை சந்தித்து வாழ்த்து பெற்றார்.

Tags : Ayyathurai Pandian MK Stalin ,Vice President ,Business Team ,
× RELATED விமான விபத்தில் மலாவி துணை அதிபர்...