சத்தியவாணி முத்து அம்மையார் நினைவு இலவச தையல் இயந்திரம் பெற விண்ணப்பிக்கலாம் : கலெக்டர் தகவல்

சென்னை, செப்.24: சென்னை மாவட்ட கலெக்டர் சீத்தாலட்சுமி வெளியிட்ட அறிவிப்பு: சத்தியவாணி முத்து அம்மையார் நினைவு இலவச தையல் இயந்திரம் வழங்கும் திட்டத்தின் கீழ், 2019-20ம் நிதி ஆண்டுக்கான இலவச தையல் இயந்திரம் வழங்கப்படுகிறது. இதற்கு விதவைகள், கணவரால் கைவிடப்பட்ட பெண்கள் மற்றும் ஏழை பெண்கள் ஆகியோர் மாவட்ட சமூகநல அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், சென்னை என்ற முகவரியை அணுகி உரிய படிவம் பெற்று அக்டோபர் 15ம் தேதி மாலைக்குள் விண்ணப்பம் செய்திடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

Tags : Satyawani Muthu Amma Memorial Free ,
× RELATED மாற்றுத்திறனாளிகளின் தாய்மார்களுக்கு தையல் இயந்திரம்