×

பாரத் அறிவியல் நிர்வாகவியல் கல்லூரியில் ஆடை வடிவமைப்பு துறைசார்பில் கருத்தரங்கு

தஞ்சாவூர்,செப்.24: பாரத் அறிவியல் நிர்வாகவியல் கல்லூரியின் நவநாகரீக ஆடைவடிவமைப்புத்துறையின் சார்பில் ஒரு நாள் கருத்தரங்கம் நடைபெற்றது. பாரத் கல்விக் குழுமத்தின் செயலாளர் புனிதா கணேசன் தலைமை வகித்து தொழில் முனைவோர் மற்றும் நிர்வாக மேலாண்மை குறித்து மாணவர்களிடையே உரையாற்றினார். தொடர்ந்து சென்னை,  அப்பேரல்ஸ் நிறுவனத்தின் நிர்வாக உறுப்பினர் கலாவதி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, “தொழில் முனைவோராக வருவதற்கு அனுபவம், சுய முடிவு, துணிவு, கடின உழைப்பு ஆகியவற்றை மாணவர்கள் தங்கள் கல்வியோடு சேர்த்து அடிப்படையிலேயே பயில வேண்டும்” என்று மாணவரிடையே உரையாற்றினார். பாரத் கல்லூரி முதல்வர் த.வீராசாமி, துணை முதல்வர்கள் ஆர்.அறவாழி, என்.ராஜராஜேஸ்வரி உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினர். முன்னதாக துறையின் தலைவர் கே.சி.சில் அல்போன்ஸ் வரவேற்றார்.

Tags : Seminar ,Department of Clothing Design ,Bharat Science College of Science ,
× RELATED மலேசியா, டெல்லி மத கருத்தரங்கில்...