×

கும்பகோணம் பள்ளியில் புதிய ஆய்வக கட்டிடம் திறப்பு

கும்பகோணம்,செப்.24: கும்பகோணத்திலுள்ள நேடிவ் அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளியில் ரூ. 10 லட்சம் மதிப்பில் புதிய ஆய்வக திறப்பு விழா நடைபெற்றது. பள்ளி செயலாளர் வெங்கட்ராமன் தலைமை வகித்தார். பழைய மாணவர்கள் சங்க தலைவர் கல்யாணசுந்தரம் வரவேற்றார். துணை தலைவர் அனந்தகிருஷ்ணன் அறிமுகவுரையாற்றினார். புதியதாக அமைக்கப்பட்ட கணினி ஆய்வகத்தை, பழைய மாணவர் சங்க நிர்வாகி ஜானகிராமன் திறந்து வைத்தார். இதில் ஏராளமான மாணவர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். இறுதியில் உதவி தலைமையாசிரியர் ஆனந்தகுமார் நன்றி கூறினார்.

Tags : Opening ,New Laboratory Building ,Kumbakonam School ,
× RELATED வக்கீல் சேம்பரை திறக்க கோரி ஆர்ப்பாட்டம்