×

திருக்காட்டுப்பள்ளி அக்னீஸ்வரர் கோயிலில் சிவனடியார்கள் உழவாரப்பணி

திருக்காட்டுப்பள்ளி, செப்.24: தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அக்னீஸ்வரர் கோயிலில் நேற்றுமுன்தினம் சிவனடியார்கள் 80 பேர் உழவாரப்பணி மேற்கொண்டனர். திருக்காட்டுப்பள்ளி அக்னீஸ்வரர் கோயில் நாயன்மார்களால் திருப்பதிகம் பெற்ற சிவத்தலமாகும். இங்கு சேலம் அஸ்தம்பட்டி சதுர்கால பைரவர் உழவாரப்பணி சிவனடியார்கள் திருக்கூட்டத்தை சேர்ந்த 80 பேர் நேற்றுமுன்தினம் (22ம் தேதி) காலை முதல் மாலை வரை உழவாரப்பணிகளை மேற்கொண்டனர்.  கோயில் வளாகம் முழுவதும் ஒட்டடைகளை அகற்றி, தரை தளங்களை கழுவி சுத்தம் செய்து, கற்சிலைகளில் ஏறியுள்ள எண்ணைப்பசைகளை அகற்றி, தினசரி பூஜைகளுக்கு உபயோகப்படும் பொருட்களை சுத்தம் செய்து கொடுத்தனர். கோயில் பிரகாரத்தில் உள்ள தேவையற்ற செடி, கொடிகளை அகற்றினர். கோயில் நந்தனவனத்தை சீர்படுத்தி பூ செடிகள் வளர வழிவகைகளை செய்தனர். கோயில் கோபுரத்தில் வளர்ந்துள்ள செடிகளை அகற்றினர். மேலும் பேருந்து நிலையம் அருகில் உள்ள “அக்னி தீர்த்தம்” வளாகத்தையும் சீர்படுத்தினர். கோயில் செயல்அலுவர் ரவிச்சந்திரன், பங்குனி உத்திரகமிட்டி சட்ட ஆலோசகர் ஜெயகுமார் மற்றும் பக்தர்கள் இச்சேவையை பாராட்டினர்.

Tags : Sivanadiyars ,
× RELATED சிவசக்தி குகத்தலமான திருப்பரங்குன்றம்