×

ஒருங்கிணைந்த பண்ணைத்திட்டத்திற்கு விவசாயிகள் தேர்வு கூட்டம்

பாபநாசம்,செப்.24: திருப்புவனத்தில் ஒருங்கிணைந்த பண்ணைத்திட்டத்திற்கு விவசாயிகள் தேர்வு கூட்டம் நடந்தது. வேளாண்மைத்துறை சார்பில் பாபநாசம் அருகே அம்மாப்பேட்டை அடுத்த திருபுவனத்தில் ஒருங்கிணைந்த பண்ணையத்திட்ட விழிப்புணர்வு மற்றும் விவசாயிகள் தேர்வு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் அம்மாப்பேட்டை வேளாண்மை உதவி இயக்குநர் சுஜாதா கலந்து கொண்டு பேசும்போது, ஒருங்கிணைந்த பண்ணையம் அமைத்திட விரும்பும் விவசாயிகளுக்கு குறைந்த பட்சம் இரண்டரை ஏக்கர் சொந்த நிலம் இருக்க வேண்டும். அவர் குடும்ப உறுப்பினர்கள் வளரும் அரசுப்பணியில் இருக்க கூடாது. ஒருங்கிணைந்த பண்ணையத்தின் உட்கூறுகளான வரப்பு பயிருடன் கூடிய நெல்சாகுபடி, மண்புழு உரம் தயாரிப்பு தொட்டி, 300 பழ மரங்கள் சாகுபடி, 70 சென்ட்டில் தீவனப்புல் கரணை சாகுபடி, 3 தேனீப் பெட்டிகள், 20 நாட்டுக் கோழிகள், 10 வெள்ளாடுகள், 2 கறவை பசு அல்லது எருமை ஆகியவற்றை தமது சொந்தச் செலவில் அமைத்து பராமரித்திட மிகுந்த ஆர்வமும், ஊக்கமும் கொண்டவராக இருத்தல் வேண்டும்.

அவரது குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் சேர்ந்து செயல்படுத்தினால் தான் அனைத்து உட் கூறுகளையும் வெற்றிக்கரமாக செயல்படுத்தி லாபம் ஈட்ட முடியும் என்றார். இதில் வேளாண்மை உதவி இயக்குநர்கள் திருப்பனந்தாள் பால சரஸ்வதி, திருவையாறு சரசு, மதுக்கூர் திலகவதி உள்பட பங்கேற்றனர். அவர்கள் விவசாயிகளிடமிருந்து பெறப்பட்ட மனுக்களை ஆய்வு செய்தனர். தேர்வாகும் விவசாயிகள் தங்கள் நிலத்தின் சிட்டா, அடங்கல், வரைப் படம், தங்கள் ஆதார் கார்டு, ரேசன் கார்டு, வங்கி பாஸ் புத்தக நகல், 2 பாஸ் போர்ட் புகைப் படம் ஆகியவற்றை சமர்ப்பிக்க வேண்டும் என்றனர். ஏற்பாடுகளை அம்மாப்பேட்டை வட்டார அட்மா மேலாளர் செல்வி, உதவி அலுவலர் அண்ணாமலை, முன்னோடி விவசாயி பால முருகன் செய்திருந்தனர்.

Tags : selection meeting ,
× RELATED விவசாயிகள் ஏமாற்றம் பிரம்மரிஷி...