×

நாகை மாவட்டத்தில் பேரிடர் காலங்களில் ஈடுபடுத்த தன்னார்வலர்கள் 70 பேர் தேர்வு

கீழ்வேளூர், செப்.24:நாகை மாவட்டத்தில் பேரிடர் காலங்களில் ஈடுபடுத்த தன்னார்வலர்கள் 70 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தமிழ்நாடு கடலோர பாதுகாப்பு குழும கூடுதல் காவல் துறை இயக்குனர் வண்ணிப்பெருமாள் அறிவுரைப்படி நாகை மாவட்டத்தில் தமிழ்நாடு கடலோர பாதுகாப்புக் குழும தன்னார்வர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு ரோந்து பணி தீவிரவாத காலங்களில் கடற்கரை பகுதியில் பாதுகாப்பு பணி மற்றும் இயற்கை பேரிடர் காலங்களில் பாதிக்கப்பட்டவர்களை மீட்பு பணி, மேலும் கடலோர பாதுகாப்பு குழுமத்தில் உள்ள அதி நவீன படகுகள் மற்றும் வாகனங்களில் ரோந்துப் பணிகளில் ஈடுப்படுத்தப்பட உள்ளனர்.

இதையடுத்து நாகை மாவட்டத்தில் உள்ள நாகை, வேளாங்கண்ணி, கீழையூர், தரங்கம்பாடி, பூம்புகார், திருமுள்லைவாசல், புதுப்பட்டினம் ஆகிய 7 கடற்கரை காவல் நிலையங்களில் உள்ள மீனவ கிராமங்களில் இருந்து தன்னார்வலர்கள் காவல் நிலையத்திற்கு 10 நபர்கள் வீதம் 70 நபர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு அடையாள அட்டை மற்றும் சீருடை வழங்கப்பட்டது. நாகையில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் இன்ஸ்பெக்டர் ராஜா, சப்-இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜ், ஜார்ஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags : volunteers ,district ,Nagai ,
× RELATED 221 கைதிகளுக்கு மதிப்பீட்டு தேர்வு