×

அமைச்சர் கமலக்கண்ணன் தகவல் ஆரம்பக் கட்டத்திலேயே டெங்கு கொசு புழுக்களை அழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் கலெக்டர் அறிவுறுத்தல்

காரைக்கால், செப்.24: டெங்கு காய்ச்சல் உருவாக காரணமாகவுள்ள கொசுக்களின் புழுக்களை ஆரம்பக் கட்டத்திலேயே அழிக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கவேண்டும் என மாவட்ட கலெக்டர் விக்ராந்த்ராஜா அறிவுறுத்தியுள்ளார். அண்டை மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல் அறிகுறி தென்பட்டதையடுத்து, காரைக்கால் மாவட்டத்தில் டெங்கு மற்றும் சிக்குன்யா காய்ச்சல் ஏற்படாத வகையில் எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து, மாவட்ட கலெக்டர் விக்ராந்த் ராஜா தலைமையில், மாவட்ட கலெக்டர் அலுவகலத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில், மாவட்ட நலவழித்துறை எடுத்துள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கலெக்டர் விக்ராந்த்ராஜா கேட்டறிந்து பேசியது:

அண்டை மாவட்டங்களில் டெங்கு, சிக்குன்யா காய்ச்சல் ஏற்படும்பட்சத்தில், காரைக்கால் மாவட்டத்திலும் அது பரவ வாய்ப்புள்ளது.
எனவே டெங்கு காய்ச்சல் உருவாக காரணமாகவுள்ள கொசுக்களின் புழுக்களை ஆரம்பக் கட்டத்திலேயே அழிக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். தண்ணீர் தேங்கும் வகையில் பொது இடங்களில் உள்ள தேவையற்றப் பொருட்களை அப்புறப்படுத்துவோடு, மக்களுக்கும் இதுகுறித்து நேரடியாக சென்று விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். கழிவுநீர் எந்த இடத்திலும் தேங்கி நிற்காத வகையில் உள்ளாட்சி அமைப்பினர் உரிய நடவடிக்கைகளை விரைவுபடுத்த வேண்டும்.

மேலும், டெங்கு கொசு உற்பதியாகமல் இருக்க, பொதுமக்கள் எவ்வாறெல்லாம் விழிப்புணர்வாக இருக்கவேண்டும் என்பது குறித்து நகராட்சி, கொம்யூன் பஞ்சாயத்து அமைப்பினர், நலவழித் துறையினர் உரிய முன்னேற்பாடுகளை செய்ய வேண்டும். குறிப்பாக, வீடுகளிலும், வீட்டை சுற்றியுள்ள பகுதிகளிலும் நீர் தேங்காமல் பார்த்துக்கொள்ள மக்களுக்கு அறிவுறுத்துவதோடு, வீட்டிலோ, சுற்றுப்புறத்திலோ டயர், தேங்காய் மட்டைகள் போன்ற உபயோகம் இல்லாத பொருட்களில் நீர் தேங்கும் வகையிலான பொருள்கள் இருந்தால் அப்புறப்படுத்தவும் அறிவுறுத்த வேண்டும். அரசு பொது மருத்துவமனையில் டெங்கு, சிக்குன்யா போன்ற காய்ச்சலுக்கான மருந்துகள் போதிய அளவில் இருப்பில் வைத்திருக்க வேண்டும். முக்கியமாக, மாவட்டம் முழுவதும் கொசு ஒழிப்புக்கான புகை மருந்து அடிக்க உடனே ஏற்பாடு செய்யவேண்டும். என்றார். கூட்டத்தில், சப்-கலெக்டர் பாஸ்கரன், நலவழித் துறை துணை இயக்குனர் மோகன்ராஜ், நகராட்சி ஆணையர் சுபாஷ் மற்றும் அரசுத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Tags : Kamalakannan ,Collector ,
× RELATED குரங்கு பெடல் வெளியிடும் சிவகார்த்திகேயன்