×

குட்கா பொருட்கள் விற்ற 4பேர் மீது வழக்கு 3 மாத சம்பளத்தை வழங்க வலியுறுத்தி நெடுங்காடு கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டம்

காரைக்கால், செப்.24: கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர்களுக்கு புதுச்சேரி அரசே நேரடியாக ஊதியம் வழங்க ஏதுவாக பொது பட்ஜெட்டில் தனியாக நிதி ஒதுக்க வலியுறுத்தி, நெடுங்காடு கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர்கள் நேற்று முதல் உள்ளிருப்பு வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காரைக்கால் நெடுங்காடு கொம்யூன் பஞ்சாயத்தில் பணிபுரியும் ஊழியர்கள், சுகாதார பணியாளர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு கடந்த 3 மாதமாக ஊதியம் வழங்கப்படவில்லை. இதனால் அலுவலக ஊழியர்கள், சுகாதார பணியாளர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் மிகுந்த வேதனையில் இருந்து வருகின்றனர்.

இந்நிலையில், 3 மாத ஊதியத்தை உடனே வழங்க வேண்டும். இனி கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர்களுக்கு புதுச்சேரி அரசே நேரடியாக ஊதியம் வழங்க எதுவாக பொது பட்ஜெட்டில் தனியாக நிதி ஒதுக்கவேண்டும். உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நெடுங்காடு கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர்கள் நேற்று முதல் உள்ளிருப்பு வேலை நிறுத்தப் போராட்டத்தை தொடங்கியுள்ளனர். ஊழியர்களின் இந்த வலை நிறுத்த போராட்டத்தால், மக்களின் அத்தியாவசிய பணிகளான துப்புரவு பணிகள், பிறப்பு, இறப்பு சான்றிதழ்கள் வழங்குதல் போன்ற பல்வேறு பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது.காரை பிரதேச அரசு ஊழியர் சங்கங்களின் சம்மேளன கௌரவ தலைவர் ஜெய்சிங், பொதுச் செயலாளர் ஷேக் அலாவுதீன், நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர் சங்கங்களின் சம்மேளன தலைவர் அய்யப்பன் ஆகியோர் நெடுங்காடு கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர்களுக்கு நேரில் சென்று ஆதரவு தெரிவித்தனர்.

Tags : Nedumkadu Commune Panchayat ,persons ,
× RELATED பிஎஸ்என்எல் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்