×

பிளக்ஸ் பிரிண்டிங் தொழில் செய்வோர் மனு பொதுமக்கள் கடும் அவதி நாகை மாவட்டத்தில் கள்ள சாராயம் விற்பனையை தடுக்க ரோமியோ டீம் அமைப்பு

நாகை, செப்.24: நாகை மாவட்டத்தில் கள்ள சாராயம் விற்பனையை தடுக்க ரோமியோ டீம் அமைக்கப்பட்டுள்ளது என்று எஸ்பி ராஜசேகரன் கூறினார்.நாகை மாவட்டத்தில் மது விலக்கு குற்றங்களை தடுக்கவும், மாவட்டத்திற்கு அருகில் உள்ள புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதியில் இருந்து மதுபானம் மற்றும் சாராயம் கடத்தி வருவோர்களை தடுக்கவும் ரோமியோ டீம் என்ற தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. ஏடிஎஸ்பி (மதுவிலக்கு) மற்றும் டிஎஸ்பி (மதுவிலக்கு) ஆகியோர் தலைமையில் இந்த தனிப்படை இயங்கி வருகிறது.

இந்த தனிப்படை போலீசார் கடந்த 14ம் தேதி முதல் 22ம் தேதி வரை ஒரு இன்ஸ்பெக்டர், 6 சப்-இன்ஸ்பெக்டர், மதுவிலக்கு போலீசார், உள்ளூர் போலீசார், ஆயுதப்படை பிரிவு போலீசார் இணைந்து நடத்திய மதுவிலக்கு வேட்டையில் மாவட்டத்தில் 170 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. 162 ஆண், 21 பெண் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். 14 ஆயிரத்து 293 லிட்டர் புதுச்சேரி மாநில சாராயம், 34 ஆயிரத்து 560 மில்லி லிட்டர் மதுபானங்கள் கைப்பற்றப்பட்டுள்ளது. மது கடத்தலுக்கு பயன்படுத்திய 18 இரண்டு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. புதிதாக உருவாக்கப்பட்ட ரோமியோ டீம் செயல்பட்டால் நாகை மாவட்டத்தில் கள்ளசாராயம் விற்பனை கட்டுக்குள் உள்ளது என்று கூறினார்.

Tags : Romeo Team Organization ,Naga District ,
× RELATED நாகை மாவட்டத்தில் பண்ணை குட்டைகளில்...