×

நெய்யார் இடதுகரை சானலில் தண்ணீர் திறக்க கேரளாவை வலியுறுத்த வேண்டும்

நாகர்கோவில், செப்.24: விஜயதரணி எம்.எல்.ஏ. தமிழக முதல்வருக்கு அனுப்பியுள்ள மனுவில் குறிப்பிட்டுள்ளதாவது: செப்டம்பர் 25ம் தேதி தமிழக - கேரள முதல்வர்கள் சந்திப்பு நடைபெற உள்ள நிலையில் கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு தொகுதி மக்கள் பயன்பெறும் வண்ணம் நெய்யார் இடது கரை சானலில் தண்ணீர் திறக்க கேரள முதல்வரை தமிழக முதல்வர் வலியுறுத்த வேண்டும்.15 ஆண்டுகளாக நெய்யார் இடதுகரை சானலில் தண்ணீர் வராததால் விளவங்கோடு தாலுகா முழுவதும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக கீழே சென்றுவிட்டது. இதனால் நெல் விவசாயம் பொய்த்துப் போனது.

ரப்பர், மரச்சீனி, வாழை, மிளகு மற்றும் மலைத்தோட்டப்பயிர்களும் வறட்சியின் பிடியில் சிக்கி உள்ளன. நான் கடந்த 8 ஆண்டுகளாக சட்டமன்றத்தில் நெய்யார் சானல் தண்ணீர் திறக்க கேரள அரசை கேட்க வேண்டுமென பேசி வந்துள்ளேன். இப்போது இரு மாநில முதல்வர்களும் அணைகள், ஆறுகள், சானல் குறித்து பேச்சுவார்த்தை நடத்துவது நல்ல அம்சம். உச்சநீதிமன்றத்தில் வழக்குகள் இருந்தாலும் நட்பாக நல்ல முடிவாக சுமூக பேச்சுவார்த்தை நடைபெறுவது நல்ல தொடக்கம். எனவே இரண்டு மாநில அரசுகளும் கருத்தொருமித்து நல்ல முடிவு எடுத்து கன்னியாகுமரி மக்களின் தாகம் தீர்க்க நெய்யார் சானலில் தண்ணீர் திறக்க முயற்சி மேற்கொள்ள வேண்டும். பேச்சுவார்த்தை வெற்றிபெற வாழ்த்துகிறேன். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

Tags : Kerala ,Neyyar ,
× RELATED ஏழைகளுக்கு இடத்தை வழங்கினால் கடவுளே...