×

இன்று முதல் விடுமுறை பள்ளிகளில் காலாண்டு தேர்வு நிறைவு அக்.3ம் தேதி மீண்டும் திறப்பு

நாகர்கோவில், செப்.24: பள்ளிகளில் காலாண்டு தேர்வுகள் நேற்று நிறைவு பெற்ற நிலையில் இன்று முதல் விடுமுறை விடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் தனியார் பள்ளிகளில் நடப்பு கல்வி ஆண்டில் காலாண்டு தேர்வு கடந்த செப்டம்பர் 12ம் தேதி தொடங்கியது. நேற்று 23ம் தேதி வரை நடைபெற்றது. இன்று முதல் தொடர்ந்து அக்டோபர் 2ம் தேதி வரை காலாண்டு விடுமுறை காலம் ஆகும். காலாண்டு விடுமுறைக்கு பின்னர் வரும் அக்டோபர் 3ம் தேதி மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் இந்த ஆண்டு காலாண்டு விடுமுறை நாட்களில் காந்தி பிறந்தநாளை கொண்டாட வேண்டும் என்று மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சக உத்தரவின் படி தமிழகத்தில் 9 நாட்களும் பட்டியலிட்டு நிகழ்ச்சிகளின் தொகுப்பு கல்வித்துறையால் அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. இதனால் ஆசிரியர்கள், பெற்றோர், மாணவர்கள் குழப்பம் அடைந்திருந்தனர். ஆனால் காலாண்டு விடுமுறையில் மாற்றம் ஏதும் செய்யப்பட வில்லை, விருப்பத்தின் அடிப்படையில் காந்தி பிறந்தநாள் நிகழ்ச்சிகளில் மாணவர்கள் கலந்து கொள்ளலாம் என்று அரசு பின்னர் விளக்கம் அளித்தது குறிப்பிடத்தக்கது ஆகும்.

Tags : holiday schools ,
× RELATED அரசுத் தேர்வுகள் இயக்கக...