×

கடலில் மிதந்து வந்த குழந்தை சடலம் அடையாளம் தெரிந்தது

ஈத்தாமொழி, செப்.24: குமரி மாவட்டம் ராஜாக்கமங்கலம் அருகே கடற்கரை சாலையில் கடந்த சில தினங்களுக்கு முன் பிறந்து சில நாட்களே ஆன பச்சிளங்குழந்தையின் சடலம் கிடந்தது. நாய் கடித்து இழுத்து வந்து போட்டதை அப்பகுதியில் உள்ளவர்கள் கவனித்தனர். இது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தகவல் அறிந்த போலீசார் குழந்தையின் உடலை மீட்டு ஆசாரிபள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பினர். தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தினர். இதில், அந்த குழந்தை பெரியகாடு பகுதியை சேர்ந்த ஒரு தம்பதிக்கு பிறந்த குழந்தை என தெரியவந்துள்ளது.

அந்த தம்பதிக்கு நாகர்கோவிலில் உள்ள ஒரு மருத்துவமனையில் கடந்த ஆகஸ்ட் 5ம் தேதி குழந்தை பிறந்தது. குழந்தை மிகவும் மோசமான நிலையில் இருந்ததால் குழந்தையை திருவனந்தபுரத்தில் உள்ள மருத்துவமனையில் அனுதிமத்தனர். ஆனால் மறுநாள் அந்த குழந்தை இறந்தது. தம்பதியினரின் சமுதாய வழக்கப்படி இதுபோன்ற குழந்தையின் சடலத்தை கல்லறை தோட்டத்தில் அடக்கம் செய்யமாட்டார்களாம். இதனால் குழந்தையின் சடலத்தை நடுக்கடலில் புதைத்துள்ளனர். அலையில் இழுத்துவரப்பட்ட சடலம் கரை ஒதுங்கியுள்ளது. அதை நாய் இழுத்து வந்து சாலையில் போட்டது தெரியவந்துள்ளது என போலீசார் தெரிவித்தனர்.

Tags : baby ,sea ,
× RELATED சிங்கக்குட்டி போல வேடமிட்ட குழந்தை... கொஞ்சி விளையாடிய சிங்கம்!