×

பள்ளிப்பட்டு அருகே குளமான நொச்சிலி - காக்களூர் தார்சாலை

பள்ளிப்பட்டு, செப். 24: பள்ளிப்பட்டு அருகே  நொச்சிலி - காக்களூர் தார் சாலையில் ஏற்பட்டுள்ள மெகா பள்ளங்களில் மழைநீருடன் கலந்து கழிவு நீர் குளம்போல் தேங்கியுள்ளது. இதில், சைக்கிளில் செல்லும் பள்ளி மாணவர்கள் மற்றும் இருசக்கர வாகன ஓட்டிகள் விழுந்து காயமடைகின்றனர்.
பள்ளிப்பட்டு அடுத்த  நொச்சிலி - காக்களூர் ஒன்றிய  தார்ச்சாலை வழியாக  பொதட்டூர்பேட்டை,  நொச்சிலி அதன் சுற்று வட்டார  பகுதிகளைச் சேர்ந்த  20க்கும் மேற்பட்ட கிராமமக்கள் அன்றாடம்  சென்று வருகின்றனர். மாணவர்கள் பள்ளிக்கு செல்லவும், கே.ஜி.கண்டிகை, திருத்தணி, அர்.கே,.பேட்டை ஆகிய பகுதிகளுக்கு இருசக்கர வாகன ஓட்டிகள் இச்சாலையை பயன்படுத்தி வருகின்றனர்.

கடந்த  5 ஆண்டுகளுக்கு முன்பு  ஊராட்சி நிர்வாகம் சார்பில், இந்த தார்ச்சாலை அமைக்கப்பட்டது. சாலை அமைக்கப்பட்ட ஒரு சில மாதங்களில்   தார், கற்கள் பெயர்ந்து  காணப்பட்டன. இதனால், கடந்த ஒரு வருடமாக  சாலைக்கு  நடுவில் பல பகுதிகளில் பெரிய அளவில் பள்ளங்கள் ஏற்பட்டுள்ளது. இதனால், சாலையில் சென்று வர  பொதுமக்கள், பள்ளி மாணவர்கள் கடும் அவதிப்பட்டனர். இந்நிலையில்,  கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருவதால், சாலையில் ஏற்பட்டுள்ள பெரிய பள்ளங்களில் கழிவு நீருடன் மழைநீரும் கலந்து தேங்கி, சாலை மெகா சைஸ் குட்டைகள் போல் காட்சி அளிக்கின்றது. இதில், வாகன ஓட்டிகள் சிக்கியும்,  கிராம வாசிகள்  சாலை கடக்க முடியாத சூழ்நிலையில் பரிதவிக்கின்றனர். பலமுறை ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்திற்கு புகார் செய்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது.  
எனவே, நொச்சிலி - காக்களூர் சாலையை சீரமைத்து பஸ் விடவேண்டும் என்று கிராமமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Pallipattu ,
× RELATED பொதட்டூர்பேட்டை, பள்ளிப்பட்டு பேரூராட்சியில் தண்ணீர் பந்தல் திறப்பு