×

கல்லூரி மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு

கடலூர், செப். 24: திருவள்ளுவர் பல்கலைக்கழகம் திடீரென தேர்வு கட்டணத்தை உயர்த்தியது. இதனை எதிர்த்து கடலூர் தேவனாம்பட்டினம் பெரியார் அரசு கலைக்கல்லூரி மாணவர்களும், கடலூர் கந்தசாமி நாயுடு மகளிர் கல்லூரி மாணவிகளும் கடந்த 17ஆம் தேதி முதல் வகுப்புகளை புறக்கணித்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.இரண்டு நாள் விடுமுறைக்கு பின்னர் நேற்று கல்லூரி திறந்த நிலையில் மீண்டும் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி மாணவர்கள், மாணவிகள் போராட்டத்தை தொடர்ந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.கடலூர் கந்தசாமி நாயுடு கல்லூரி மாணவிகள் நேற்று காலை வகுப்புகளை புறக்கணித்து கல்லூரி வளாகத்தில் திரண்டனர். அங்கு அவர்கள் தேர்வு கட்டணத்தை ரத்து செய்யக்கோரி முழக்க போராட்டம் நடத்தினர்.அவர்கள் கல்லூரியைவிட்டு வெளியேறி செல்லவிடாமல் தடுக்கும் முயற்சியாக கல்லூரி நிர்வாகம் கல்லூரி வாயில் கதவினை பூட்டு போட்டு மூடியது. இதனால் மாணவிகள் கல்லூரி வளாகத்தில் சிறை வைக்கப்பட்டதுபோல தோற்றம் ஏற்பட்டது. இதுபோல் நேற்று காலை பெரியார் கலைக்கல்லூரி மாணவர்களும் வகுப்புகளை புறக்கணித்து  போராட்டம் நடத்தினர். முன்னதாக அவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்க போராட்டம் நடத்தினர்.

Tags : College students ,
× RELATED ஒரே பைக்கில் சென்றபோது அடையாளம்...