×

ஒட்டன்சத்திரத்தில் திமுக இளைஞரணி ஆலோசனை கூட்டம்

ஒட்டன்சத்திரம், செப்.20:  ஒட்டன்சத்திரத்தில் திமுக இளைஞர் அணி ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாவட்ட அவைத்தலைவர் மோகன் தலைமை வகித்தார். நகர செயலாளர் வெள்ளைச்சாமி வரவேற்றார். ஒன்றிய செயலாளர்கள் சோதீஸ்வரன், தங்கராஜ், தர்மராஜ், சுப்பிரமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இக்கூட்டத்திற்கு சிறப்பு அலைப்பாளராக ஒட்டன்சத்திரம் சட்டமன்ற உறுப்பினர் அர.சக்கரபாணி கலந்துகொண்டு, தலைமைக் கழகம் அறிவித்துள்ளபடி இளைஞர் அணியில் புதிய உறுப்பினர்களை நகரம், பேரூர், வார்டு, ஊராட்சி பகுதிகளில் சிறப்பு முகாம் அமைத்து குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் அதிகளவில் சேர்க்க வேண்டும் என்று பேசினார். கூட்டத்தில் தலைமை பொதுக்குழு உறுப்பினர்கள் கண்ணன், ஆறுமுகம், அன்பு (எ) காதர்பாட்சா, மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் ஹரிஹரசுதன் உள்ளிட்ட நகர, ஒன்றிய, பேரூர் நிர்வாகிகள் கலந்துகொண்டனர். முடிவில் மாவட்ட துணை செயலாளர் ராஜாமணி நன்றி கூறினார்.

Tags : DMK ,Youth Advisory Meeting ,
× RELATED சொல்லிட்டாங்க...