×

மத்திய அரசை கண்டித்து தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

மதுரை, செப். 20:  மதுரையில் ரயில்வே ஸ்டேஷன் மேற்கு நுழைவு வாயிலில் மத்திய அரசை கண்டித்து எஸ்ஆர்எம்யூ சங்கத்தினர் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். உதவி கோட்ட செயலாளர் ராம்குமார் தலைமை வகித்தார்.
ஆர்ப்பாட்டத்தில், ‘ரயில்வேயில் உற்பத்தி தொழிற்சாலைகளை கார்ப்பரேட் ஆக்கும் திட்டத்தை கைவிட வேண்டும். ரயில்வே துறையை தனியார் மற்றும் பன்னாட்டு நிறுவனங்களுக்கு தாரை வார்க்கக்கூடாது. கடைசி சம்பளத்தில் 50 சதவிகிதம் கியாரண்டியுடன் பென்ஷன் வழங்க வேண்டும். பணியில் உள்ள தொழிலாளர்களின் வேலை நேரத்தை 8 மணி நேரத்திற்கும் மேலாக அதிகப்படுத்தக்கூடாது. ஹெச்ஆர்எம்எஸ் என்னும் பெயரில் அக்கவுண்ட்ஸ் மற்றும் பெர்சனல் துறை குமாஸ்தாக்களை வீட்டுக்கு அனுப்பும் போக்கை கைவிட வேண்டும். ‘லார்ஜஸ்’ திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும். உற்பத்திக்கு ஏற்றவாறு போனஸை உயர்த்தி வழங்க வேண்டும். ஐஆர்சிடிசி மூலமாக தேஜஸ் மற்றும் 5 எக்ஸ்பிரஸ் ரயில்களை தனியாருக்கு விற்கும் முயற்சியை கண்டிக்கிறோம் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டதில் 100க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டனர்.

Tags : Trade unions ,government ,
× RELATED தமிழ்நாட்டின் அனைத்து...