×

முதியவர் தற்கொலை

காரைக்குடி, செப்.20: காரைக்குடி அருகே 74 வயது முதியவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
காரைக்குடி அருகே உள்ள சாக்கோட்டை வீரசேகரபுரத்தை சேர்ந்தவர் சோலையப்பன்(74). இவர் தனது மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 25 ஆண்டுகளுக்கும் மேலாக தனியாக வசித்து வந்தார். கடந்த சில நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் மன உளைச்சலில் இருந்துள்ளார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் வீட்டிற்குள் படுக்க சென்றவர் திரும்ப வெளியில் வரவில்லை. அருகில் இருந்த மணிகண்டன் என்பவர் சோலையப்பனின் வீட்டில் பார்த்த போது அவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது. இது குறித்து சாக்கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றானர்.

Tags : suicide ,
× RELATED குடும்பத்தகராறு மனைவி தீக்குளித்து தற்கொலை: கணவனும் தற்கொலைக்கு முயற்சி