×

ஜப்பான் நிறுவனத்துடன் இணைந்து சோனா குழுமம் சார்பில் வேலை வாய்ப்பு திட்டம்

சேலம், செப்.20:  சேலம் சோனா கல்விக் குழுமம் மற்றும் அதன் அங்கமான சோனா யுக்தியுடன் டெக்னோஸ்மைல், ஜெ-புரோநெட் போன்ற ஜப்பான் நிறுவனத்துடன் இணைந்து மாணவர்களுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. கல்லூரி முதல்வர் செந்தில்குமார் முன்னிலையிலும், சோனா கல்விக் குழுமத்தின் தலைவர் வள்ளியப்பா தலைமையிலும் நடைபெற்ற நிகழ்ச்சியில், ஜப்பான் நிறுவனங்களின் அதிகாரிகளான மட்சுய் மற்றும் கென்யாஅபே ஆகியோர் பங்கேற்றனர்.  தொடர்ந்து பேசிய சோனா கல்வி குழுமத்தின் தலைவர் வள்ளியப்பா, இந்த ஒருங்கிணைப்பு மூலம் மாணவர்களுக்கு ஜப்பானில் கல்வி பயிலும் வாய்ப்புகள் அதிகம் ஏற்படும் எனவும், ஜப்பானின் பாடத்திட்டத்தை எளிதில் கற்கும் வகையில் சோனா யுக்தியில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்றார்.
 இந்த முயற்சியின் மூலம், சோனா யுக்தி, ஜப்பான் கல்வி நிறுவனத்திற்கும் இடையே தொழில் திறன் பரிமாற்றங்கள் சிறப்பாக நடைபெறும். இதன் வாயிலாக சோனா யுக்தி மாணவர்களுக்கு, ஜப்பானில் வேலை வாய்ப்புகள் பெருவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும் என்றார். சோனா கல்லூரியின் ஜப்பானீஸ் மொழி அமைப்பாளர் பேராசிரியர் சரவணன் பொறியியல், கலை மற்றும் அறிவியல், டிப்ளமோ, மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு அதிகரிக்கும் என்றார். அப்போது மாணவ, மாணவிகள், பேராசிரியர்கள், சோனா யுக்தியின் நிர்வாகிகள் உடனிருந்தனர்.

Tags : Sona Group ,Japan ,
× RELATED வடமாநில ஆர்டர் குறைவால், உற்பத்தியும்...