×

ராஜபாளையத்தில் கிராம அடிப்படை பயிற்சி முகாம்

வாழப்பாடி, செப்.20: வாழப்பாடி அருகே, ராஜபாளையம் ஊராட்சியில் கிராம அடிப்படை பயிற்சி முகாம் நடைபெற்றது. வாழப்பாடி அருகே மேற்கு ராஜபாளையம் ஊராட்சியில், கிராம அடிப்படை பயிற்சி முகாம் நேற்று நடந்தது. வேளாண்மை துறை சார்பில், உழவர் பயிற்சி நிலைய அமைப்பாளர் வெங்கடாசலம் ஒருங்கிணைப்பில் நடைபெற்றது. இதில் சேலம் உழவர் பயிற்சி நிலைய துணை இயக்குனர் சையத் அன்வர் பாட்சா, வேளாண் அலுவலர் தவமணி, பட்டு வளர்ச்சித்துறை ஆய்வாளர் யுவராஜா, வேளாண்மை உதவி இயக்குனர் திருப்பதி, வேளாண் அலுவலர் தாமரைச்செல்வன், அட்மா திட்ட அலுவலர்கள் திலகவதி, சித்ரா, கால்நடைத்துறை மருத்துவர் ரவிச்சந்திரன், பொறியியல் துறை பொறியாளர் ஜோதிமணி உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர். முகாமில் கலந்துகொண்ட விவசாயிகளுக்கு அனைத்து திட்டங்கள் எடுத்துக் கூறப்பட்டது.

Tags : Village Basic Training Camp ,Rajapalayam ,
× RELATED ராஜபாளையம் அருகே மேற்குத் தொடர்ச்சி...