×

சேந்தமங்கலத்தில் புதிய தாலுகா அலுவலகம் திறப்பு

சேந்தமங்கலம், செப்.20: சேந்தமங்கலம் புதிய தாலுகா அலுவலகம் ₹2 கோடியே 25 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ளது. இதனை சென்னை தலைமை செயலகத்திலிருந்து, முதல்வர் எடப்பாடி பழனிசாமி வீடியோ கான்பரன்சிங் மூலம் தொடங்கி வைத்தார். இதையொட்டி, சேந்தமங்கலம் புதிய தாலுகா அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு, மாவட்ட வருவாய் அலுவலர் துரைரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். சேந்தமங்கலம் எம்எல்ஏ சந்திரசேகரன் குத்துவிளக்கு ஏற்றி வைத்து, அலுவலக பணியை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் தாசில்தார் ஜானகி, பேரூராட்சி செயல் அலுவலர் இளங்கோ, நகர செயலாளர் ராஜேந்திரன், பேரூராட்சி முன்னாள் தலைவர் ரமேஷ் ஒன்றிய செயலாளர் வருதராஜன், பேரூர்
செயலாளர் பழனிசாமி, பாலு மற்றும் வருவாய்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags : Opening ,New Taluk Office ,
× RELATED கொடைக்கானலில் இசேவை மையம் திறப்பு