×

திருச்செங்கோட்டில் திமுக கொடியேற்று விழா

திருச்செங்கோடு, செப்.20: திருச்செங்கோடு நகராட்சி 31வது வார்டு, கரட்டுப்பாளையத்தில் பேரறிஞர் அண்ணாவின்  111வது பிறந்தநாள் கொடியேற்று விழா நடைபெற்றது. திருச்செங்கோடு நகர பொறுப்பாளர் கார்த்திகேயன் தலைமை வகித்தார். வார்டு பொறுப்பாளர் விஜயகுமார் வரவேற்றார். மேற்கு மாவட்ட திமுக செயலாளர் கே.எஸ்.மூர்த்தி எம்எல்ஏ, கட்சிக் கொடியேற்றி வைத்து பேசினார்.
விழாவில், மாவட்ட துணை செயலாளர்கள் சேகர், சுகந்தி மணியம், மாவட்ட பொருளாளர் குமார், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் செழியன், யுவராஜ், ஒன்றிய  செயலாளர்கள் வட்டூர் தங்கவேல், கபிலர்மலை சண்முகம், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் மதுரா செந்தில், தலைமை கழக பேச்சாளர் முரசொலிமுத்து, முன்னாள் மாவட்ட அவைத்தலைவர் தாண்டவன், முன்னாள் கவுன்சிலர் தேவராஜன், பன்னீர்செல்வம், வர்த்தக அணி கிரிசங்கர், விவசாய தொழிலாளர் அணி ராஜமாணிக்கம், நகர பொறுப்புக்குழு உறுப்பினர்கள், வார்டு செயலாளர்கள், மகளிர் அணியினர் கலந்து கொண்டனர்.

Tags : DMK Flag Day ,Tiruchengode ,
× RELATED திருச்செங்கோட்டில் சட்டவிரோதமாக கள்...