×

பாலம் கட்டும் பணியை விரைந்து முடிக்க கோரிக்கை

உடுமலை,செப்.20:  உடுமலையில் இருந்து ஆனைமலை செல்லும் ரோட்டில் சாலையூர் கிராமம் உள்ளது.  இங்கு பாலம் கட்டும் பணி நடந்துவருகிறது. இதனால் அருகில் மாற்று வழித்தடம்  ஏற்படுத்தப்பட்டது. 6 மாதங்களாகியும் பாலம் கட்டி முடிக்கப்படாமல் உள்ளது.  எந்த பணியும் தற்போது நடைபெறவில்லை. சர்வீஸ் சாலை குண்டும் குழியுமாக  கிடக்கிறது. இதனால் வாகனத்தில் செல்வோர் மிகவும் அவதிப்படுகின்றனர்.  நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் உள்ளனர். பாலம் கட்டும் பணியை விரைந்து முடிக்க வேண்டும், முன்னதாக சர்வீஸ் சாலையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : bridge ,
× RELATED மயிலாடும்பாறை அருகே பாதியில்...