ஊட்டி-மஞ்சூர் சாலையில் அபாயகர பாறை அகற்றம்

ஊட்டி, செப். 20: ஊட்டி-மஞ்சூர் சாலையில் குன்னூர் சந்திப்பு பகுதியில் வளைவான பகுதியில் உள்ள ராட்சத பாறை உடைத்து அகற்றப்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் நிம்மதியடைந்துள்ளனர். ஊட்டி-மஞ்சூர் சாலையில் குன்னூர் சந்திப்பு பகுதியில் இருந்து லல்ேடல் செல்லும் பகுதியில் காந்திநகர் அருகே வளைவான பகுதியில் ராட்சத பாறை ஒன்று போக்குவரத்துக்கு இடையூறாகக நீட்டி கொண்டிருந்தது. இந்த பாறையானது இடதுபுறம் சாலையில் நீட்டி கொண்டுள்ளது. இதனால் ஊட்டி நோக்கி வர கூடிய வாகனங்கள் அதன் மீது மோதி விடாமல் இருக்கும் வகையில் வாகனத்தை வலது புறமாக இயக்குகின்றனர். இதுபோன்ற சமயங்களில் எதிரே வாகனங்கள் வரும் போது விபத்து ஏற்பட கூடிய நிலை உள்ளது.

போக்குவரத்திற்கு இடையூறாகவும், விபத்தை ஏற்படுத்தும் வகையிலும் காணப்படும் இந்த ராட்சத பாறையை அகற்றிட வேண்டும் என்பது தொடர்பான செய்தி தினகரன் நாளிதழில் வெளியானது. இதனை தொடர்ந்து விபத்தை ஏற்படுத்தும் வகையில் இருந்த ராட்சத பாறை நெடுஞ்சாலைத்துறையினரால் உடைத்து அகற்றப்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் நிம்மதியடைந்துள்ளனர்.

Tags : road ,Ooty-Manjur ,
× RELATED நிலச்சரிவு பகுதியில் அந்தரத்தில் தொங்கும் பாறை